தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

3 hours ago
ARTICLE AD BOX

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் தொடக்கம் முதலே ஆட்டக்காரர்கள் அனைவரும் தில்லி அணியின் பந்துவீச்சில் திணறினர்.

இதையும் படிக்க: திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

குஜராத் ஜெயண்ட் அணித் தரப்பில் பெத் மூனி 10 ரன்களிலும், ஹார்லீன் தியோல் 5 ரன்களிலும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதிகபட்சமாக பார்தி ஃபுல்மாலி 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் குவித்தது. தில்லி அணித் தரப்பில் சிக்கா பாண்டே, மரிஸான்னே காப், அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

Read Entire Article