ARTICLE AD BOX
மகா கும்பமேளாவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையையொட்டி அதிகாலை புனித நீராட லட்சக்கணக்கானோர் திரண்டிருந்ததால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இது குறித்து, மமதா பானர்ஜி பேசியிருப்பதாவது: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதே மகாகும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்வது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ள மமதா மானர்ஜி, கும்பமேளாவில் புனித நீராடுபவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசின் தவறான திட்டமிடலால் பலர் உயிரிழக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“என்னைப் பற்றி யோகி ஆதித்யநாத் என்ன சொன்னாலும் கவலையில்லை. ஒரு முதல்வராக யோகி ஆதித்யநாத்துக்குரிய மரியாதையை அளிக்கிறேன்.
அதேநேரத்தில், கும்பமேளாவில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையை, இறப்பு சான்றிதழ்களை கூட தராமல் இழுத்தடிக்கிறீர்கள். நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தால் அதை வழங்கிடவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.