மகிழ்விக்க முயன்று மகிழ்ச்சியை இழக்காதீர்கள்!

4 hours ago
ARTICLE AD BOX

யாராவது மனது உடைந்து விட்டால் உடனே அதை சரி செய்ய நினைப்பீர்கள் இதை உணர்ச்சிகரமான பொறுப்பு என்பர். அடுத்தவர் பிரச்னைகளை உங்கள் தோளில் சுமப்பது நல்லதாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் அமைதியை இழக்க வேண்டி வரும். இதற்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும். நீங்கள் உங்களையே "நான் இப்படிச் செய்வதால் என் அமைதியை இழக்கிறேனா" என்று கேட்டுக் கொள்ளுங்கள் தெளிவு பிறக்கும்.

வேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும் மற்றவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போகும் என்று எண்ணி அப்படிச் சொல்லாமல் இருந்தால் உங்களுக்கு மனவேதனை தான் மிஞ்சும். வேண்டாம் என்று சொல்வது செல்ஃபிஷ் தனமல்ல. அது அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு சிலரிடம் பேசும் போது உங்கள் சக்தி விரயமாவதை உணர்வீர்கள். ஏனென்றால் அந்த நபர் அவருடைய பிரச்னைகள் பற்றி மட்டுமே உங்களிடம் பேசுவர். இதை உணர்ச்சிகளின் சோர்வு என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். உங்கள் உணர்வுகளை சோர்வடையும் செய்யும் நபர்களிடமிருந்து ஒதுங்கி இருங்கள்.

அடுத்தவர் பேசும் விஷயம் உங்களுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் மனக்கசப்பைத் தவிர்க்க அதை அப்படியே மனதில் மூடி வைப்பீர்கள். இந்த மாதிரி தொடர்ந்து உங்கள் வெளிப்பாட்டை வெளியிடாமல் வைப்பது மன அழுத்தம் ஏற்படுத்தும். அடுத்தவர்களை மகிழ்விப்பதற்காக மௌனத்தை கடைபிடிப்பது உடலளவிலும் மனதளவிலும் பிரச்னை ஏற்படுத்தும்.

சிலசமயம் உங்களிடம் உதவி கேட்கும் நபரால் அந்த உதவியை செய்ய முடியாது என்று கூறினால் மனசாட்சி உங்களை உறுத்தும். உங்களை மனச்சாட்சி உறுத்தும் அளவிற்கு வேலை கொடுக்கும் நண்பரோடு விலகியே இருங்கள். உங்கள் அமைதியை கெடுத்துக் கொண்டு உதவி செய்வது நல்லதல்ல.

இதையும் படியுங்கள்:
நல்லொழுக்கமுள்ள குழந்தைகளின் சிறந்த 7 பழக்கங்கள்!
Happiness

சிலருடைய நடவடிக்கைகள் உங்கள் எல்லையை மீறுவதாக இருந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்கள். உங்களின் மீது அக்கறையாக இருப்பவர்கள் உங்கள் எல்லை மீறி நடக்க மாட்டார்கள். அப்படி நடப்பவர்கள் தவறான வர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தனியாக இல்லாவிட்டாலும் சில மனிதர்களோடு சேர்ந்து இருக்கும் போது தனிமையாக உணர்வீர்கள். நீங்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைக்க உங்கள் உணர்வுகளை மறந்து விடுவீர்கள். இது ஆபத்தானது. நீங்கள் ஒரு நல்ல சூழலில் இருந்தால் தான் நல்ல மாதிரியான நபர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முடியும்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் குழந்தையின் முன் வாக்குவாதம் செய்வதால் ஏற்படும் 7 ஆபத்தான விளைவுகள்!
Happiness
Read Entire Article