ARTICLE AD BOX

மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் இன்று கோவைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் பிரபலமான ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த அமித்ஷாவுக்கு ஏர்போர்ட்டில் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று இரவு 9 மணி அளவில் கோவை ஏர்போர்ட் வந்த அமித்ஷா 3 நாட்கள் தங்கவுள்ளார்.
இங்கிருந்து அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் அமித்ஷா அங்கு கொங்கு மண்டலம் முக்கிய தொழில் அதிபர்களை சந்திக்கிறார். அதன் பிறகு கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகர அலுவலகத்தை அமித்ஷா நாளை திறந்து வைக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து மாலையில் ஈஷா யோகா மையத்திற்கு மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள கோவை ஏர்போர்ட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார். மேலும் அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் அவர் நாளை மறுநாள் மீண்டும் டெல்லிக்கு விமானத்தில் திரும்புவார்.