ARTICLE AD BOX
மதுரை: தேனி மாவட்டம், ஸ்ரீரெங்கபுரத்தைச் சேர்ந்த ஷப்னா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான அறிவுரை குழுவை, உயர்மட்ட குழுவின் கீழ் அமைக்க வேண்டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து 2021ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அது தொடர்பான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது. எனினும் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழு முறையாக இயங்கவில்லை.
எனவே, அனைத்து பள்ளிகளிலும் இக்குழுவை முறையாக அமைத்திடவும், மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ெஜ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த நிலை அறிக்கையை, அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
The post அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு அறிவுரை குழு உள்ளதா? ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.