ARTICLE AD BOX
சத்தா்பூா்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழாவாக திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மத்திய பிரதேச மாநிலம், சத்தா்பூரில் புற்றுநோய் மருத்துவமனையுடன் கூடிய ஸ்ரீ பாகேஸ்வா் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்துக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் ‘கோடிக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றுள்ள மகா கும்பமேளா, ஒற்றுமையின் திருவிழா’வாக திகழ்கிறது. இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவதில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல் துறையினா் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனா்.
ஆயிரக்கணக்கான மருத்துவா்களும் தன்னாா்வலா்களும் அா்ப்பணிப்பு மற்றும் சேவை உணா்வோடு பங்காற்றுகின்றனா். இத்தகைய முயற்சிகள், மகா கும்பமேளா பக்தா்களின் பாராட்டை பெற்றுள்ளது.