ARTICLE AD BOX

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான துறை அமைச்சர்களின் பதில், மற்ற விவாதங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது, உத்திர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு பற்றி பெருமை பொங்க பேசினார். பிரதமர் பேசுகையில், பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பற்றி பேசுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். மகா கும்பமேளா வெற்றிகரமாக நடைபெற உதவிய கோடிக்கணக்கான நாட்டு மக்களை நான் வாழ்த்துகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பலர் இங்கு பங்களித்தனர். நாட்டு மக்களுக்கும், உ.பி, மற்றும் பிரயாக்ராஜ் மக்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
செங்கோட்டையில் இருந்து ‘சப்கா சத் சப் கா விகாஸ்’ என்பதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தினேன். முழு உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை மகா கும்பமேளா வடிவில் பார்த்தது. புதிய சாதனைகளுக்கு உத்வேகம் தரும் தேசிய எழுச்சியை மகா கும்பமேளாவில் காண்கிறோம். மகா கும்பமேளா நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு தகுந்த பதிலை அளித்தது.
கடந்த ஆண்டு, ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டையின் போது, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது என்பதைப் பார்த்தோம். மகா கும்பமேளா நிகழ்வின் போது இந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது. நாட்டின் கூட்டு எழுச்சி கூட்டு பலத்தை இந்நிகழ்வு அதிகரித்தது. என மகா கும்பமேளா குறித்து உணர்ச்சி பொங்க பேசினார் பிரதமர் மோடி.