ARTICLE AD BOX
அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதியில் பத்திரமாக இறங்கியது டிராகன் விண்கலம்... 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்...
இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடல் பகுதியில் இறங்கியது டிராகன் விண்கலம்... விண்வெளியில் இருந்து பூமிக்கு 17 மணி நேரம் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள்...
விண்கலத்தில் இருந்து வெளியேறிய விண்வெளி வீரர்களை வரவேற்ற மீட்புக்குழுவினர்... மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு...
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸால் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை... பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து...
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் உரையாடல்... உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது 30 நாட்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை என புடின் உறுதி...
சிம்ஃபனி இசையை அரங்கேற்றிய பின் மாநிலங்களவைக்கு சென்ற இளையராஜாவிற்கு உற்சாக வரவேற்பு... “வணக்கம் பெரியண்ணா” என தமிழில் அழைத்து வாழ்த்திய ஜெயா பச்சன்...
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 3 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்... கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பங்கேற்பது உறுதி...
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கம்... ஆட்சியருக்கு மிரட்டல் விடுப்பது போல் வெளியான ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடவடிக்கை...
திருத்தணியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்... படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க முடிவு... விரைவில் தொழில்நுட்ப ஆலோசனையை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டம்...
புதுக்கோட்டை அருகே காவல் ஆய்வாளரை தாக்கிய புகாரில் கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தல்... கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்...