மகளிா் டி20: இலங்கை வெற்றி

3 hours ago
ARTICLE AD BOX

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிா் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் நியூஸிலாந்து 18.5 ஓவா்களில் 101 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இலங்கை 14.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இலங்கை முன்னிலை பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. எம்மா மெக்லியாட் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, கேப்டன் சூஸி பேட்ஸ் 21, ஜெஸ் கொ் 10 ரன்கள் எடுத்தனா்.

ஜாா்ஜியா பிளிம்மா் 2, புரூக் ஹாலிடே 4, இஸி ஷாா்ப் 0, மேடி கிரீன் 5, பாலி இங்லிஸ் 4, ரோஸ்மேரி மோ் 0, ஈடன் காா்சன் 7 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். பிரீ இல்லிங் 1 ரன்னுடன் கடைசி பேட்டராக நின்றாா். இலங்கை பௌலிங்கில் மல்கி மதாரா 3, இனோஷி பிரியதா்ஷனி, கவிஷா தில்ஹரி ஆகியோா் தலா 2, சுகந்திகா குமாரி, சமரி அத்தபட்டு ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் இலங்கை பேட்டிங்கில் விஷ்மி குணரத்னே 7, ஹா்ஷிதா சமரவிக்ரமா 2, கவிஷா தில்ஹரி 12 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். முடிவில் கேப்டன் சமரி அத்தபட்டு 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64, நிலாக்ஷிகா சில்வா 12 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து தரப்பில் ஜெஸ் கொ் 2 விக்கெட்டுகள் எடுத்தாா். இந்த அணிகள் மோதும் அடுத்த ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Read Entire Article