மும்பை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்?

3 hours ago
ARTICLE AD BOX

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் 2025ன் தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், பாதி போட்டிகளுக்கு மேல் விளையாடுவது சந்தேகம் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார் பும்ரா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் இதோ

பும்ரா காயம்

பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக வந்து வீசி அணியின் வெற்றிக்கு முடிந்தவரை உதவினார். கிட்டத்தட்ட 32 விக்கெட்களை எடுத்து அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ஆகவும் செயல்பட்டார். ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்து வீசியபோது அவருக்கு முதுகில் வலி அதிகமானது. அதனைத் தொடர்ந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியவில்லை. அதனை தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால் தற்போது முழு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஐபிஎல்லில் பும்ரா இல்லை?

வரும் மார்ச் 22 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் ஆரம்பமாகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. தற்போது பாதிக்கு மேல் போட்டிகளை இழக்க நேரிடும் என்று மும்பை இந்தியன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் தங்களது முதல் போட்டியில் விளையாடுகின்றன. மும்பை அணியில் டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீஸ் டாப்லி, கார்பின் போஷ், அர்ஜுன் டெண்டுல்கர், சத்தியநாராயண ராஜு, அஷ்வனி குமார், ஹர்திக் பாண்டியா போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் பும்ரா இல்லாதது, அவர்களுக்கு பெரும் குறையாகவே இருக்கும்.

ஐபிஎல் 2025க்கான மும்பை அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டோப்லி, ஸ்ரீஜித் ராஜ்கோ பாவா, ராஜ் அன்காப்ஸ் கிருஷ்ணன், வெங்கட் நாராயணன், ராஜ் அன்கா கிருஷ்ணன் டெண்டுல்கர், விக்னேஷ் புதூர், சூர்யகுமார் யாதவ்.

மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article