மகளிர் பிரீமியர் லீக் பெங்களூரு அணி தோல்வி

3 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு: டபிள்யூபிஎல் டி20 தொடரில் உபி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அதிர்ச்சியாக தோற்றது. டபிள்யூபிஎல் தொடரின் 9வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், உபி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி பந்து வீச, பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், டேன்னி வையாட் ஹாட்ஜ்ஜும் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். மந்தனா 6 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த எலிஸ் பெரியும், டேன்னியும் அதிரடியாக ரன் குவித்தனர். டேன்னி 57 ரன்னில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த பெங்களூரு அணி 181 ரன் குவித்தது.

எலிஸ் பெரி 90 ரன்(55 பந்து, 3 சிக்சர், 9 பவுண்டரி) விளாசி களத்தில் இருந்தார். 182 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டுகளை பறிகொடுத்து 180 ரன் எடுத்து போட்டியை சமன் செய்தது. வாரியர் அணியில் அதிகபட்சமாக சோபி 33 ரன் எடுத்தார். பெங்களூரு அணி பந்துவீச்சில், ரானா 3 விக்கெட்டும், ரேனுகா, கிம் தலா 2 விக்கெட்டும், எலிஸ் பெரி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் வாரியர்ஸ் அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன் எடுத்தது. 9 ரன் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 6 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்து அதிர்ச்சியாக தோற்றது. இதனால் வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

The post மகளிர் பிரீமியர் லீக் பெங்களூரு அணி தோல்வி appeared first on Dinakaran.

Read Entire Article