ARTICLE AD BOX

image courtesy: @wplt20
பெங்களூரு,
3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு நடப்பு தொடரில் இரு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றிக்கு குறிவைத்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி 2 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.�