ARTICLE AD BOX

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சித்தலாப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையன் மைக்கேல் ஸ்டீஃபன் (வயது 38) போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஸ்டீஃபனை பிடிக்கச் சென்றபோது, அவர் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். இதையடுத்து, தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் அம்பேத்கர், காலில் சுட்டுப் பிடித்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல திருநெல்வேலியில் நிலப் பிரச்சனை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது தௌஃபிக் என்பவரை நெல்லை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சேலத்தைச் சேர்ந்த ரௌடி ஜானை, ஈரோட்டில் வெட்டிக் கொலை செய்த 4 பேர் தப்ப முயன்றபோது, அவர்களின் காலில் சுட்டு பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். இன்று சித்தலா பாடியில் கொள்ளையன் ஸ்டீபன் சுட்டு பிடிக்கப்பட்டது ஆறாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸார்…! appeared first on Rockfort Times.