ARTICLE AD BOX
போன், லேப்டாப், டிவினு ஒன்னுமே வேணாம்.. இது போதும்.. Apple Mac Studio 2025 அறிமுகம்.. என்ன விலை?
ஆப்பிள் (Apple) அடுக்கடுக்காக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. எம்3 சிப் உடன் புதிய 11-இன்ச் மற்றும் 13-இன்ச் ஐபேட் ஏர் 2025 (iPad Air 2025) மாடல்களை அறிமுகம் செய்தது. பின்னர் ஏ16 சிப் உடன் 'பேஸ்' ஐபேட் மாடலை அறிமுகம் செய்தது.
பின்னர் எம்4 சிப் உடன் 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மேக்புக் ஏர் 2025 (MacBook Air 2025) மாடல்களை அறிமுகம் செய்த கையோடு ஆப்பிள் நிறுவனம் எம்4 மேக்ஸ் (M4 Max) மற்றும் எம்3 அல்ட்ரா (M3 Ultra) சிப்கள் உடனான புதிய மேக் ஸ்டுடியோவையும் அறிமுகம் செய்துள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

ஆப்பிளின் புதிய மேக் ஸ்டூடியோ 2025 (Apple Mac Studio 2025) மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: எம்4 மேக்ஸ் சிப் உடன் வரும் ஆப்பிள் மேக் ஸ்டூடியோ 2025 மாடலின் விலை ரூ.2,14,900 என்றும், எம்3 அல்ட்ரா சிப் உடன் வரும் ஆப்பிள் மேக் ஸ்டூடியோ 2025 மாடலின் விலை ரூ.4,29,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் மார்ச் 12 முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும்
எம்4 மேக்ஸ் சிப் உடன் வரும் ஆப்பிள் மேக் ஸ்டூடியோ 2025 மாடலின் முக்கிய அம்சங்கள்: இது வீடியோ எடிட்டர்கள், டெவலப்பர்கள் மற்றும் கிரியேட்டிவ் யூஸர்கள் போன்ற எக்ஸ்பெர்ட்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 16-கோர் சிபிய, 40-கோர் ஜிபியு மற்றும் வேகமான நியூரல் எஞ்சின் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது 128ஜிபி வரையிலான யுனிஃபைடு ஸ்டோரேஜை ஆதரிக்கிறது மற்றும் மேம்படுத்தப்பட்ட வீடியோ செயலாக்கத்திற்கான மீடியா எஞ்சினையும் கொண்டுள்ளது.
எம்3 அல்ட்ரா சிப் உடன் வரும் ஆப்பிள் மேக் ஸ்டூடியோ 2025 மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 32-கோர் சிபியு, 80-கோர் ஜிபியு மற்றும் 32-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது 512ஜிபி வரை யுனிஃபைடு ஸ்டோரேஜ் மற்றும் 16டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜை கொண்டுள்ளது, இது எம்3 அல்ட்ரா சிப்பை விட கிட்டத்தட்ட இருமடங்கு செயல்திறனை வழங்கும் என்று ஆப்பிள் கூறுகிறது
ஆப்பிளின் புதிய ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.59,900
256 ஜிபி - ரூ.69,900
512 ஜிபி - ரூ.89,900
1 டிபி - ரூ.1,09,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.74,900
256 ஜிபி - ரூ.84,900
512 ஜிபி - ரூ.1,04,900
1டிபி - ரூ.1,24,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்: 128 ஜிபி - ரூ.79,900
256 ஜிபி - ரூ.89,900
512 ஜிபி - ரூ.1,09,900
1டிபி - ரூ.1,29,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.94,900
256 ஜிபி - ரூ.1,04,900
512 ஜிபி - ரூ.1,24,900
1டிபி - ரூ.1,44,900
ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் 2025 மாடல்களின் விலை: 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 13-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.1,24,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் விலை: 128 ஜிபி - ரூ.34,900; 256 ஜிபி - ரூ.44,900 மற்றும் 512 ஜிபி - ரூ.64,900. ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் விலை: 128 ஜிபி - ரூ.49,900; 256 ஜிபி - ரூ.59,900 மற்றும் 512 ஜிபி - ரூ.79,900.