ARTICLE AD BOX
போதும்பா சாமி மாசத்துக்கு ரூ.300.. 5 STEP-களில் Jio, Airtel, Vi மொபைல் நம்பரை BSNL-க்கு PORT செய்வது எப்படி?
2 கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கீழ் திடீரென கூட்டம் கூட்டமாக புதிய கஸ்டமர்கள் சேர்வது ஏன்? மற்றும் 17 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி லாபம் பார்த்ததற்கு பின்னால் காரணம் என்ன? இந்த 2 கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் - தனியார் டெலிகாம் நிறுவனங்களின் அநியாய விலை உயர்வு தான்!
கடந்த 2024 ஜூலை 3 ஆம் தேதி முதல், முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களான பார்தி ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) ஆகியவைகள் தத்தம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை கடுமையாக (10 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை) உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் மட்டும் எந்த விலை உயர்வையும் அறிவிக்கவில்லை.

இதன் விளைவாக பிஎஸ்என்எல் சேவையின் கீழ் கூட்டம் கூட்டமாக புதிய கஸ்டமர்கள் சேர்ந்தனர்; கூடவே பிஎஸ்என்எல்-க்கு லாபமும் வந்தது. இதற்கிடையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் விலை உயர்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. இது நடந்தால் தொடர்ந்து ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியாவும், மொபைல் ரீசார்ஜ் கட்டங்களின் விலைகளை அதிகரிக்கலாம்.
இதற்கு ஒரு முடிவே இருக்காது. ஒருவேளை நீங்கள் உங்களுடைய ஜியோ, வோடாபோன் ஐடியா அல்லது ஏர்டெல் சிம் கார்ட்டை பிஎஸ்என்எல்-க்கு மாற்ற விரும்பினால்.. அதாவது போர்ட் செய்ய விரும்பினால்.. வெறும் 5 ஸ்டெப்களில் அதை செய்வது எப்படி என்கிற வழிமுறைகள் இதோ:
ஸ்டெப் 1 - நிலுவையில் உள்ள பில்களை கிளியர் செய்யவும்: போர்டிங் செயல்முறையை தொடங்கும் முன், உங்களின் தற்போதைய தொலைத்தொடர்பு வழங்குநரின் (ஏர்டெல், ஜியோ அல்லது விஐ) நிலுவையில் உள்ள அனைத்து பில்களும் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதை உறுதி செய்யவும். ஏதேனும் நிலுவை தொகைகள் இருந்தால், உங்கள் போர்டிங் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
ஸ்டெப் 2: தனித்துவமான போர்டிங் குறியீட்டை (Unique porting code - UPC) உருவாக்க வேண்டும்: உங்களுடைய போர்டிங் செயல்முறையை தொடங்க, உங்களுக்கு ஒரு தனித்துவமான போர்ட்டிங் குறியீடு (யுபிசி) தேவை. அதை எப்படி பெறுவது என்கிற எளிமையான வழிமுறைகள் கீழே உள்ளது.
- உங்களுடைய மொபைல் போனில் மெசேஜிங் ஆப்பை திறந்து பின்வருவது போல் டைப் செய்யவும்: PORT [உங்கள் மொபைல் எண்]
- இந்த மெசேஜை 1900 க்கு அனுப்பவும்
- இப்போது எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு ஒரு யுபிசி கோட் அனுப்பி வைக்கப்படும். இது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் (ஜம்மு & காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் மட்டும் இதற்கான செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்)
ஸ்டெப் 3: பிஎஸ்என்எல் சேவை மையம் அல்லது ரீடெயில் விற்பனை கடையை அணுகவும்: யுபிசி கோட் உடன், அருகிலுள்ள பிஎஸ்என்எல் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் ஆல் அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் விற்பனையாளரிடம் செல்லவும்.
ஸ்டெப் 4: பிஎஸ்என்எல் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: பிஎஸ்என்எல் ஸ்டோருக்கு சென்றதும், நீங்கள் செய்ய வேண்டியது - வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தை (CAF) நிரப்பவும். செல்லுபடியாகும் புகைப்பட ஐடியை வழங்கவும் (ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட்) மற்றும் முகவரி ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 5: கட்டணத்தை செலுத்தி உங்களின் புதிய பிஎஸ்என்எல் சிம்மை பெறவும்: உங்கள் யுபிசி கோட்-ஐ சமர்ப்பித்து, போர்டிங் கோரிக்கையை முடிக்கவும். தேவையான போர்டிங் கட்டணத்தை செலுத்தவும். கடைசியாக உங்களுக்கான புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை பெறவும். எஸ்எம்எஸ் கன்ஃபிர்மேஷன் கிடைத்ததும், உங்கள் மொபைலில் பழைய சிம்முக்கு பதிலாக புதிய பிஎஸ்என்எல் சிம்-ஐ பயன்படுத்தவும்.