ARTICLE AD BOX
IPL 2025: ரூ.195 எடுத்து வைங்க.. லைவ் ஸ்ட்ரீம் வருது.. Jio, Airtel, Vodafone Idea ரீசார்ஜ்.. அடிமட்ட விலைக்கு!
டி20 ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகளுக்கு ரெடியாகிவிட்டனர். அடுத்த மாதம் போட்டிகள் தொடங்க இருப்பதால் நேரடி ஒளிப்பரப்புக்கு எந்த ஓடிடிக்கு சந்தா செலுத்த வேண்டும் என்று திட்டமிட தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ரூ.195 முதல் மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் தொடங்குகின்றன. இதில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.
ஜியோ ரூ 195 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 195 Prepaid Plan): இந்த திட்டம் டேட்டா + ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 15 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல ஜியோஹாட்ஸ்டார் சந்தா 90 நாட்களுக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுடன் ஜியோஹாட்ஸ்டார் வேண்டுமானால் அடுத்து திட்டம் சரியாக இருக்கும்.

ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 Prepaid Plan): ஜியோஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ்கள் (SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது.
இதே 84 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. அதேபோல வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி சலுகை வருகிறது.
ஏர்டெல் ரூ 160 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 160 Prepaid Plan): ஜியோவை போலவே மலிவான விலைக்கு கிடைக்கும் டேட்டா + ஓடிடி சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கிறது. மேலும், 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு 7 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுடன் அடுத்த திட்டம் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 398 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 398 Prepaid Plan): இந்த ஜியோஹாட்ஸ்டார் திட்டம் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கிறது. ஆனால், 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு ஓடிடி சந்தா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
வோடபோன் ஐடிய ரூ 151 திட்டம் (Vodafone Idea Rs 151 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் ஓடிடி + டேட்டா சலுகை மட்டுமே வருகிறது. இருப்பினும், 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. அதோடு 4 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இதே ஜியோஹாட்ஸ்டார் சந்தா பின்வரும் திட்டத்தில் வாய்ஸ் கால்களுடன் வருகிறது.
வோடபோன் ஐடிய ரூ 469 திட்டம் (Vodafone Idea Rs 469 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மலிவான விலைக்கு இந்த திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன.
Image Credits: Indian Premier League