ARTICLE AD BOX
வந்த வரை லாபம்.. பிப்.28 iPhone 16e விற்பனைக்கு முன் iPhone 16 மீது விலை குறைப்பு.. எவ்வளவு?
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் மாடலாக அறிமுகமான ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த மாடல் வருகிரியா 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கும் ஐபோன் 16 (iPhone 16) மாடலுக்கும் ரூ.20,000 விலை வித்தியாசம் உள்ளது.
ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிஓ ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.79,900 ஆகும். ஏற்கனவே.. இவ்விரு மாடல்களில் எதை வாங்கலாம் என்கிற ஒப்பீடுகள் மற்றும் ஐபோன் 16இ VS ஐபோன் 16 விவாதங்கள் ஆன்லைனில் தொடங்கி விட்ட நிலையில், அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது சைலன்ட் ஆக ஒரு வேலையை பார்த்துள்ளது.

பிப்.28 முதல் ஐபோன் 16இ விற்பனை தொடங்கவுள்ள நிலைப்பாட்டில், அமேசான் இந்தியா வலைத்தளமானது ஐபோன் 16 மாடலை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. தற்போது ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிஓ ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு பதிலாக ரூ.7000 விலை குறைப்பை பெற்று ரூ.72,900 க்கு வாங்க கிடைக்கிறது
இதுவே நீங்கள் ஐபோன் 16 மாடலின் பிங்க் கலர் ஆப்ஷனை வாங்கினால் கூடுதலாக ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஐபோன் 16 (128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின்) பிங்க் கலர் வேரியண்ட் ஆனது ரூ.7500 விலை குறைப்பை பெற்று ரூ.72,400 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 16இ மாடலின் முக்கிய அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.
மேலும் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐயும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.
ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்வது எப்படி? ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் ஆப்பிள் ஸ்டோரில் ஐபோன் 16இ மாடலை ப்ரீ ஆர்டர் செய்யலாம் இது தவிர்த்து ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களான - அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா வழியாகவும் ப்ரீ-ஆர்டர் செய்யலாம். அதாவது
ஐபோன் 16இ மீது என்னென்ன ப்ரீ-ஆர்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன? ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக ஐபோன் 16இ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 வரை கேஷ்பேக் பெறலாம். இதோடு ஆப்பிள் நிறுவனம் ரூ.76,500 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் வழங்குகிறது.
ஐபோன் 16இ மீதான ஆப்பிள் அறிவித்துள்ள இலவச சலுகைகளை பொறுத்தவரை, இந்த மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஆப்பிள் ம்யூசிக் (Apple Music), ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV Plus) மற்றும் ஆப்பிள் ஆர்கேட் (Apple Arcade) சந்தாக்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.