போச்சு.. இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்.. அமெரிக்க அரசு எடுத்த விவகாரமான முடிவு!

9 hours ago
ARTICLE AD BOX

போச்சு.. இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய டிரம்ப்.. அமெரிக்க அரசு எடுத்த விவகாரமான முடிவு!

New York
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் ஒருவருக்கு விசா வழங்கப்பட்ட பிறகும் கூட அமெரிக்க அரசால் விசா சோதனை, தனி நபர் சோதனை நடத்தப்படும். விசா வாங்கியவரிடம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து அமெரிக்க சட்டங்கள் மற்றும் குடியேற்ற விதிகளை அவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த, விசா வைத்திருப்பவர்களை தொடர்ந்து சார்பார்ப்போம். அவர்கள் சரியாக நடந்து கொள்ளாத பட்சத்தில் அவர்களது விசாவை ரத்து செய்து, உடனே அவர்களை நாடு கடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர்.

Donald Trump

அதாவது உங்களுக்கு ஒரு விசா கிடைத்து அமெரிக்காவில் நீங்கள் செட்டில் ஆகிவிட்டீர்கள் என்று நினைத்தால் கூட அந்த விசா எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்துவது, அவர்களின் கிரீன் கார்டுகளை நீக்குவது, நாடு கடத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்தியர்கள் பலர் இந்த ஆய்விற்கு உள்ளாகி வருகின்றனர்.

முக்கியமாக வயதான இந்தியர்கள் ஆய்விற்கு உட்படுகிறார்கள். சில இந்தியர்களை, நீங்கள் உங்களின் கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். இதற்காக US Custom and Border Protection (CBP) அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

சோதனை மேல் சோதனை

வயதான இந்தியர்களை சோதனை செய்து உங்களுக்கு கிரீன் கார்டு இருக்க இனியும் தகுதி இல்லை என்று கூறி அவர்களை கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். உடனே உங்கள் கிரீன் கார்டுகளை சரண்டர் செய்யுங்கள் என்றும் பிரஷர் கொடுக்கப்படுகிறது.

கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் அப்படி சரண்டர் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் வழக்கு தொடுக்கலாம். ஆனாலும் சரண்டர் செய்யும்படி அவர்களுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறதாம். சமீபத்தில்தான் துணை அதிபர் வான்ஸ் கிரீன் கார்டு என்பது நிரந்தரமல்ல.. அதை நாங்கள் நினைத்தால் நீக்குவோம் என்றார். ஏற்கனவே அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா கொண்டு வரப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்டு கார்டு விசா வருகிறது

அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.

மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.

இனி முதலீட்டாளர்கள் விசா கிடையாது?

ஏற்கனவே அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் உள்ளது. இதை EB-5 விசாக்கள் என்று அழைப்பார்கள். EB-5 கள் 1990 இல் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை உருவாக்க கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.

இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது. அதோடு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்தியர்கள் கஷ்டம்

அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்டு விசா இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் EB-5 விசாக்கள் மூலம் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே நிரந்தர விசா கிடைக்கும். அதாவது EB-5 விசாக்கள் வாங்க 8 கோடி ரூபாய் கட்டினால் போதும். ஆனால் இப்போது புதிய விதி காரணமாக 50 கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும்.

இதனால் இந்தியர்கள் எளிதாக இந்த விசாவை வாங்க முடியாது. ஏற்கனவே EB-5 விசாக்கள் வாங்க திட்டமிட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு இல்லாமல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது. அப்படி சரிவதால் போக போக 5 மில்லியன் டாலர் மதிப்பு சரியும். இதனால் இந்தியர்கள் செலுத்த வேண்டிய தொகையின் இந்திய மதிப்பு தொடர்ந்து உயரும்.

More From
Prev
Next
English summary
Blow to Indians, Visa Screening to continue even after getting visa says US President Donald Trump
Read Entire Article