ARTICLE AD BOX

கல்லூரி விழா ஒன்றில் பாமக கட்சியின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். முன்பின் தெரியாத பழக்கம் இல்லாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவர்களிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தாமல் மதித்து பழகுங்கள். பெண் கல்வி மிக மிக முக்கியம். பெண்கள் முன்னேறுவதற்கு இன்று பல வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன. அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு உயர வேண்டும் என்று அவர் கல்லூரி பெண்களுக்கு அட்வைஸ் கூறினார்.