ARTICLE AD BOX
Published : 04 Mar 2025 09:41 PM
Last Updated : 04 Mar 2025 09:41 PM
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை: 17 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் - மதுரைக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12635), எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.
தாம்பரம் - ஐதராபாத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய சார்மினார் அதிவிரைவு ரயில் (12759), தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து அதேநாளில் மாலை 6.20 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் - ராமேஸ்வரத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய சேது அதிவிரைவு ரயில் (22661), எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் - புதுச்சேரிக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (66051), எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதேநாளில் காலை 7.10 மணிக்கு புறப்படும். காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (12606), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
மன்னார்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16180), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (12632), செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66052), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
நேரம் மாற்றம்: சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20665), 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். மொத்தம் 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தேசிய ஜவுளித் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-ம் இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
- சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸி.க்கு எதிராக எப்படி இருந்தது இந்திய பவுலிங்?
- மொழிக் கொள்கை: பழனிவேல் தியாகராஜன் நேர்காணலை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
- எஸ்டிபிஐ தலைவர் எம்.கே.ஃபைஸி கைது: டெல்லியில் அமலாக்கத் துறை திடீர் நடவடிக்கை