ARTICLE AD BOX
சென்னை: கோமலா ஹரி பிக்சர்ஸ், ஒன் ட்ராப் ஓஷியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜென்டில்வுமன்’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், லியோ, எடிட்டர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் காத்தவராயன், இயக்குனர்கள் த.செ.ஞானவேல், லெனின் பாரதி மற்றும் லெஸ்லியா பங்கேற்றனர். இயக்குனர் ராஜு முருகன் பேசும்போது, ‘‘பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் இந்த டீமுக்கு நன்றி’’ என்றார்.