ARTICLE AD BOX
பொதுவாக பால் குடிப்பது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பால் குடித்தால் மட்டும் தான் நீ ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று சொல்லி தான், நம்மை சிறு வயதில் இருந்து பால் குடிக்க வைத்துள்ளனர். இதை நம்பிய நாமும் பல க்ளாஸ் பாலை குடித்திருப்போம். ஆனால் இவை அனைத்தும் பொய்யாம். ஆம், சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.
சமீபத்தில், ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நாம் குடிக்கும் பால் சைலண்ட் கில்லர் போல் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இது போன்ற பக்க விளைவுகள் பெண்களை தான் அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. பால் குடிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பால் குடிப்பதால், லாக்டோஸ் வீக்கத்திற்கு வழிவகுக்கப்படுகிறது. ஆனால் அதே சமையம் பால் பொருள்களான தயிர், நெய் போன்ற பொருட்களால் எந்த ஆபத்தும் இல்லை. பாலில் உள்ள லாக்டோஸ், இதயத்தை வேகமாக முதிர்ச்சியடைய செய்யும் என்றும், இந்த ஆபத்து பெண்களை மட்டுமே பாதிக்கும் என்றும் ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
60,000 பெண்கள் மற்றும் 40,000 ஆண்கள் உட்பட 101,000 பேர் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில், அதிக அளவு பால் குடிக்கும் பெண்களுக்கு இதய செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உட்பட இதய நோய்கள் வருவதற்கான 5 சதவீதம் அதிக ஆபத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் எவ்வளவு அதிகமாக பால் குடிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் இதயத்துக்கு ஆபத்து என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு நாளைக்கு 300 மில்லிக்கு மேல் குடித்தால் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
The post பெண்களே, இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க… மீறினால் பெரும் ஆபத்து!!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.