ARTICLE AD BOX
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள லிங்கபடா கிராமத்தை சேர்ந்த ஜோதிர்மயி ரானா(25) என்ற இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணின் வீட்டிற்கு ஒரு நபர் அடிக்கடி வந்து அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து தருமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இளம்பெண் ஜோதிர்மயி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பெண் கேட்டு வந்தவர்தான் இந்த கொலையை செய்திருப்பார் என்று சந்தேகிப்பதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.