பெங்களூர் - சென்னை ரயிலில்... பெண்ணிடம் நகைப்பையைத் திருடிய போலீஸ்காரர் கைது

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவர் குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றிருந்தார். இவர் சனிக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தனர். 

Advertisment

ரேணுகா ரேணுகா தனது குடும்பத்துடன் ரயிலில் வந்துகொண்டிருந்த நிலையில், இரவு நேரம் ஆகிவிட்டதால் தூங்கியுள்ளார். அப்போது, அவர் நகைகள் வைத்திருந்த பையை தலையனை போல வைத்திருந்திருக்கிறார். அப்போது, யாரோ திடீரென அந்த பையை எடுப்பதை அறிந்து, திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது வாலிபர் ஒருவர் அந்த நகைப்பையை எடுத்து வைத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பையை தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர், திருதிருவென விழித்துக்கொண்டு, அந்த பையை  திடீரென தூக்கி வெளியில் வீசியுள்ளார். அந்த பை திருமுல்லைவாயில் - அம்பத்தூர் இடையே ரயில் வந்துகொண்டிருந்த போது வீசப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் அதிகாலை 4.30 மணியளவில் வாலஜா ரயில் நிலையத்தில் ஏறியதும், அவர் ஒரு போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது. 

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம், வாலஜா பகுதியை சேர்ந்த வசந்தகுமார், ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஓட்டுநராக வேலை பார்த்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். செம்பியம் போலீஸ் குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். வசந்தகுமார் கடந்த 21-ம் தேதி ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பும்போது, ஓடும் ரயிலில் பெண்ணிடம் இருந்து நகைப்பை திருடியுள்ளார். 

Advertisment
Advertisement

மேலும், வசந்தகுமார் திருடி வீசிய அந்த பையில், அந்த பெண்ணின் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், மோதிரம், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. ஒரு போலீஸ்காரரே ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Read Entire Article