ARTICLE AD BOX
தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் எ. வ.வேலுவும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை என்றும் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.