ARTICLE AD BOX
முன்விரோதம் காரணமாக பெண்ணை அதிமுக பிரமுகர் பெண்களோடு சேர்ந்து தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த பர்மா கண்ணன், அவ்வை ரம்யா, மணிகண்ட என்ற பிரபு ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி லலிதாவை ,அதிமுகவைச் சேர்ந்த பர்மா கண்ணன், அவ்வை ரம்யா உள்ளிட்டோர் வீடு அருகே வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் லலிதாவை மட்டுமல்லாமல் அவரது உறவினர்களையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக லலிதா நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முன்விரோதம் காரணமாக தன்னை பற்றி அவதூறாக பேசியதாக பர்மா கண்ணன், அவ்வை ரம்யா தனது ஆதரவாளர்களோடு சென்று தனது வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதே போல அவ்வை ரம்யா தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரை பெற்று போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருதரப்பு பெண்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுதாக்கி கொள்ளும் காட்சி வெளியானது. மேலும் கூட்டத்தில் இருந்த பர்மா கண்ணன் என்பவர் பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து போட்டு தாக்கியுள்ளார். இதில் இரு தரப்பு பெண்கள் மீது மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக பர்மா கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என லலிதா தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு