பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

5 hours ago
ARTICLE AD BOX

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

ஒரு தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பிக்சட் டெபாசிட் பரிசாக வழங்கப்படும் என்றும், ஆண் குழந்தை பிறந்தால் பசுமாடு பரிசாக வழங்கப்படும் என்றும் ஆந்திர மாநில எம்.பி ஒருவர் அறிவித்துள்ளார்.
 
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தெலுங்கு தேச எம்.பி அம்பல நாயுடு என்பவர், தனது தொகுதியில் மூன்றாவது குழந்தை பெறும் குடும்பங்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி, மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தையின் வங்கி கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் பிக்சட் டெபாசிட் வைக்கப்படும். அதேபோல், மூன்றாவதாக பிறக்கும் ஆண் குழந்தைக்கு பசுமாடு மற்றும் கன்று பரிசாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மக்கள் தொகை அதிகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்படுவதாகவும், இவ்வாறு செய்வதன் மூலம் திருமண வயதை எட்டும் பெண் குழந்தைக்கு 10 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
 
"என் தாயார், சகோதரிகள், மனைவி, மகள்கள் என தினந்தோறும் சந்திக்கும் பெண்களால் தான் நான் ஊக்குவிக்கப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன். பெண் குழந்தைகள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம். மகளிர் தினத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்றும் அவர் தெரிவித்தார்.
 
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை குறிப்பிட்ட அவர், "பெண் குழந்தைகளுக்கு முன் நிற்கும் தடைகளை நீக்குவது மிகவும் அவசியம்" என்றும் கூறினார்.
 
Edited by Siva
Read Entire Article