ARTICLE AD BOX
சென்னை,
சென்னை சேர்ந்த சதீஷ் குமார் (வயது 28) என்பவர் பிரபல டெலிவிரி நிறுவனத்தின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் உள்ள ஒரு பெண் குளிப்பதை அவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்ததும் அப்பெண் கூச்சலிட, சதீஸ்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் பெண் புகாரளித்ததை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :