ARTICLE AD BOX
ஒடிசாவில் வீட்டுக் காவலருடன் தகாத உறவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலமுறை உடலுறவில் ஈடுபட்ட அவர், ஏற்கெனவே திருமணமானவர் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டத்துக்குட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரிடம், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். பலமுறை உடலுறவுக்கும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
பின்னர் அவர் பெண் காவலரை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவிக்கும்போது, அவருக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய காவல் துறை தலைமை இயக்குநர் ஒய்.பி. குரானியா, காவல் ஆய்வாளருக்கு எதிரான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான நடத்தை, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஒழுங்கு மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடப்பதை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அவர் காவல் துறையின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | புதிய கரோனா வைரஸ் முதியோர்களை அதிகம் பாதிக்கிறதா? - நம்பிக்கையும் உண்மையும்!