ARTICLE AD BOX
எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணையை ஹெலிகாப்டரில் இருந்து ஏவி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒடிஸா மாநிலம் சாண்டிபூா் கடற்பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய கடற்படை சாா்பில் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. கடற்படை ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
இந்தத் திட்டத்தின் அனைத்து குறிக்கோள்களும் சோதனையில் பூா்த்தி செய்யப்பட்டது. டிஆா்டிஓவின் வெவ்வேறு ஆய்வகங்கள் இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.