ARTICLE AD BOX
Today Rasi Palan 21 January 2025: இன்று இந்த 4 ராசிக்காரர்களை தேடி பணம் வரப்போகுதாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
இன்று மேஷ ராசிக்காரர்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்கலாம், இதனால் மன அமைதியின்மை ஏற்படலாம். இன்று எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையைத் தீர்க்க மற்றவர்களின் நிதி உதவி தேவைப்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க மோதல்களைத் தவிர்ப்பதும் அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று இனிமையான நாளை அனுபவிக்கலாம். உங்கள் நண்பர்களின் முழு ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது உற்சாகத்தையும், மனஅமைதியையும் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை நிலவும். இருப்பினும், புதிய வணிக முயற்சிகள் சில இழப்புகளைக் கொண்டு வரலாம். புதிய சொத்து வாங்குவதற்கான நிதி உதவி உங்கள் உடன்பிறந்தவர்களிடமிருந்து வரக்கூடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிரீதியாக நல்ல நாளாக இருக்கும். இன்று அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலை நிமித்தமாக நீண்ட தூர பயணம் செல்ல நேரிடும். சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை பரிசுகளால் ஆச்சரியப்படுத்துவார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இன்று உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். கடனில் சிக்கிய பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோரின் ஆசீர்வாதங்கள் தடைப்பட்ட பணிகளை முடிக்க உதவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சிம்மம்
இன்று நீங்கள் மோசமான நாளை அனுபவிக்காலம். உங்கள் புத்திசாலித்தனம் இன்று உங்களுக்கு துணையாக இருக்காது, இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பாதகமான பலன்களை அளிக்கலாம். இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் சில பெரிய நிதி இழப்பையும் சந்திக்க நேரிடலாம். வழக்கத்தை விட இன்று உங்கள் இயல்பில் அதிகப்படியான கோபம் இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கடினமாகவும் விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். உங்களின் அவசர புத்தி காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கலவையான நாளை எதிர்பார்க்கலாம். அவர்களின் ஆரோக்கியம் இன்று மிகப்பெரிய கவலையாக மாறும். குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் சில ஏமாற்றமான செய்திகளை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் பெரிய இழப்புகள் ஏற்படலாம். விபத்துகளைத் தவிர்க்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம். உங்கள் குடும்பத்தில் ஒரு திடீர் விழாவை ஏற்பாடு செய்யப்படலாம். உங்கல் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தீர ஆலோசிக்காமல் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சில தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் முன்னேற்ற பாதையில் உள்ள தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். உங்கள் குடும்ப பிரச்சினைகளை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உங்களின் அனைத்துப் பணிகளும் சவால்களுடன் தொடங்கினாலும், ஆனால் இறுதியில் சுமூகமாக முடிவடையும். நீங்கள் வீட்டை சீரமைப்பதற்காக கணிசமான அளவு பணத்தை செலவிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்டமான நிறம் ஊதா.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று வருமானம் மற்றும் செலவுகளில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் போது உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கும். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலையைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். எந்த ஒரு வேலையையும் வேறு ஒருவரிடம் ஒப்படைத்தால் அதை முடிப்பதில் சிக்கல் ஏற்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்திறனைக் கண்டு மேலதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வழக்கத்தை விட சிறப்பான நாளை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நேர்மறையான முன்னேற்றங்கள் மகிழ்ச்சியைத் தரும். காதலில் இருப்பவர்கள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பார்கள். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புகள் அதிகரிப்பதைக் காணலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.