ARTICLE AD BOX
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், மகாரா காவல் நிலையத்தில் வேலை பார்த்து வரும் காவல் உதவி ஆய்வாளர் மோகித் ராணா. இந்த காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளரும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
காவலரின் அறையில் புகுந்து அதிர்ச்சி
இதனிடையே, சம்பவத்தன்று இருவரும் பணியில் இருந்தனர். அப்போது, மதுபோதையில் பணிக்கு வந்த ராணா, பெண் காவல் உதவி ஆய்வாளரின் அறையில் நுழைந்து பலாத்காரம் செய்ய முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உதவி ஆய்வாளர், காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
பாலியல் தொல்லை
மேலும், பணியில் பெண் காவலரிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என் புருஷன் மேலே நீ எப்படி கலர் பூசுவ? மாமியார் - மருமகள் சண்டையில் பறிபோன உயிர்.!
இதையும் படிங்க: பேராசிரியரின் பொறுக்கித்தனம்.. 20 மாணவிகள், 59 வீடியோக்கள்.. அதிர்ச்சியை தந்த பகீர் தகவல்.!