Top 10 News Headlines: “தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது” போப் ஃப்ரான்சிஸ் டிஸ்சார்ஜ் - டாப் 10 செய்திகள்

1 day ago
ARTICLE AD BOX

தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி பாதிப்புகள்

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவல். கடந்தாண்டில் 47 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்; 2024ல் மொத்தம் 4.8 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

நிதிப்பகிர்வு குறித்த நிதியமைச்சர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி

"தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை  நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்”- கனிமொழி எம்.பி

“தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது” -மகாராஷ்டிரா கவர்னர்

தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று, 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்" மும்பையில் நடைபெற்ற ஹெட்கேவர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் மற்றும் ஒரு பசு மாடு பலி

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே நேற்று இரவு இடி மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் மற்றும் ஒரு பசு மாடு உயிரிழந்தன. நேற்று இரவு பெய்த மழையின் போது இடி மின்னல் தாக்கியதில் கால்நடைகள் உயிரிழந்தால் விவசாயிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு

யஷ்வந்த் வர்மாவு எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவு. இந்த விவகாரத்தை விசாரிக்க பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.

தேர்கள் சாய்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: பெங்களூரு அருகே உஸ்கூரில் மத்தூரம்மா கோயில் தேரோட்டம் நடைபெற்றபோது உயரமான இரு தேர்கள் சாய்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு ஓசூரை சேர்ந்த லோகித், பெங்களூருவை சேர்ந்த ஜோதி ஆகிய இருவர் உயிரிழப்பு; 120 அடி உயரம் கொண்ட இரு தேர்களும் காற்றால் சாய்ந்தபோது 10க்கும் மேற்பட்டோர் காயம்.

சுஷாந்த் சிங் மரணம் - விசாரணை அறிக்கை தாக்கல்

"நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை” சுஷாந்த் சிங்கை ரியாதான் தற்கொலைக்கு தூண்டினார் என அவரது தந்தை அளித்த புகார் மீது விசாரணை மேற்கொண்ட சிபிஐ, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். 36 நாள் சிகிச்சைக்குப் பின் நலமுடன் வாடிகன் திரும்ப உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.

ஐபிஎல் - இன்று இரண்டு போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஐதராபாத் மற்றும்ராஜஸ்தான் அணிகள் மோதின. சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை காட்டி சென்னை மெட்ரோ மற்றும் மாநகரப் பேருந்துகளில் ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

Read Entire Article