ARTICLE AD BOX
KKR VS RCB: Sunil Narine Hit Wicket: ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கேப்டன் அஜிங்யே ரஹானே 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி தரப்பில் குர்னால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
கொல்கத்தாவை வீழ்த்திய ஆர்சிபி
பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரர் பில் சால்ட் 31 பந்தில் 56 ரன்கள் விளாசினார். விராட் கோலி 36 பந்தில்59 ரன்கள் விளாசினார். 3 விக்கெட் வீழ்த்திய குர்னால் பாண்ட்யா ஆட்டநாயகனாக ஜொலித்தார். இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 26 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.
CSK vs MI: சிஎஸ்கேவின் மெயின் பிரச்சனையே இதுதான்! இதை சரி செய்தால் கப் கன்பார்ம்!
சுனில் நரைனுக்கு அவுட் கொடுக்கப்படவில்லை
முன்னதாக சுனில் நரைன் 17 ரன்னில் ஆடிக்கொண்டிருந்தபோது ராசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தில் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அதாவது ராசிக் சலாம் வீசிய அந்த பந்து தலைக்கு மேலே சென்றதால் அது வைடு பால் என அறிவிக்கப்பட்டது. அப்போது கிரீஸில் இருந்த சுனில் நரைனின் பேட் ஸ்டெம்பில் உரசியதால் பெயில்ஸ் கீழே விழுந்தது. பேட்டிங் செய்யும் ஒரு பேட்ஸ்மேனின் பேட் ஸ்டெம்பில் பட்டால் அது 'ஹிட் அவுட்' என அறிவிக்கப்படும்.
ஹிட் விக்கெட் என்றால் என்ன?
ஆனால் சுனில் நரைன் பேட் ஸ்டெம்பில் பட்டு பெயில்ஸ் விழுந்தபோது ஆர்சிபி வீரர்கள் அம்பயரிடம் அதை அவுட் கேட்டு முறையிட்டனர். ஆனாலும் அம்பயர் சுனில் நரைன் அவுட் என அறிவிக்கவில்லை. இதனால் ஆர்சிபி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது ஐசிசி கிரிக்கெட் விதிகளின்படி பவுலர் பந்தை வீசத் தொடங்கும்போதோ அல்லது அந்த பந்தை எதிர்கொள்ளும்போதே ஒரு பேட்ஸ்மேனின் பேட் ஸ்டெம்பில் பட்டால் அது ஹிட் அவுட் ஆகும்.
அம்பயர் அவுட் கொடுக்காதது ஏன்?
ஆனால் சுனில் நரைன் சந்தித்த பந்து வைடு என்பதால் அது நல்ல பந்து என கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே அது நல்ல பந்து இல்லை என்பதால் அம்பயர் சுனில் நரைனுக்கு ஹிட் விக்கெட் அவுட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CSK vs MI Head to Head: அட! சேப்பாக்கத்தில் மும்பை இவ்வளவு மேட்ச் ஜெயிச்சிருக்கா!