பெங்களுரு அணியின் கேப்டனாக இதுவே என்னுடைய இலக்கு – ராஜாத் பட்டிதார் அதிரடி

6 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது சொந்த மண்ணில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இதுவே என் இலக்கு : ராஜத் பட்டிதார்

மொத்தம்10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதி போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ள இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது சொந்த மண்ணில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முறை பங்கேற்க உள்ள 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் புது கேப்டனுடன் களமிறங்குவதால் மேலும் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது. லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமித்துள்ள வேளையில் ஆர்சிபி அணி ரஜத் பட்டிதாரை புது கேப்டனாக நியமித்துள்ளது.

அதேபோன்று டெல்லி அணியானது அக்சர் பட்டேலையும், பஞ்சாப் அணியானது ஷ்ரேயாஸ் ஐயரையும் கேப்டனாக நியமித்துள்ளது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக ரஹானாவை நியமித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஜத் பட்டிதார் தனது கேப்டன் பதவி குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எப்போதும் ஆர்.சி.பி அணியின் வெற்றிக்காக துணை நிற்பேன். எனக்கு கேப்டன்சி வழங்கிய நிர்வாகத்திற்கும், உரிமையாளர்களுக்கும் நன்றி. நான் என்னுடைய உணர்ச்சிகளை கேப்டனாக களத்தில் பெரிய அளவு வெளிக்காட்டாமல் போட்டியின் சூழல் எவ்வாறு இருக்கிறதோ அதனை கணித்து அணியின் நலனுக்காக துணை நிற்பேன்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே மும்பை வேணாம்.. இந்த அணிதான் இம்முறை ஐ.பி.எல் கப் ஜெயிக்கனும் – ஹர்பஜன் சிங் விருப்பம்

பெங்களூரு அணியின் வெற்றி தான் எனது முதல் இலக்கு. ஒவ்வொரு போட்டியிலுமே வெற்றியை நோக்கி எங்களது அணியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நான் இந்த தொடரில் விளையாட இருக்கிறேன் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

The post பெங்களுரு அணியின் கேப்டனாக இதுவே என்னுடைய இலக்கு – ராஜாத் பட்டிதார் அதிரடி appeared first on Cric Tamil.

Read Entire Article