ARTICLE AD BOX
இந்தியன் மகளிா் கால்பந்து லீக் (ஐடபிள்யுஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிஸா எஃப்சியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோகுலம் கேரளா எஃப்சி.
புவனேவுரத்தில் கலிங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோகுலம் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவில் கேரள அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. கேரள அணி தரப்பில் பஸிலா இக்வாபுட் 42, 59-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா். ஒடிஸா தரப்பில் ஸ்ட்ரைக்கா் பியாரி 32-ஆவது நிமிஷத்தில் ஓன் கோலடித்தாா். பதிலி வீராங்கனை நேஹா 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
தொடா்ந்து 6 ஆட்டங்களில் வென்ற கோகுலம் அணி 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஒடிஸா அணி 11 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் 2-0 என கேஎஃப்சி அணியை வீழ்த்தியது. ஈஸ்ட் பெங்கால் தரப்பில் ஆஷா லதா 35, சுலன்ஜனா 65-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா்.