ARTICLE AD BOX
சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பரம எதிரிகள் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளன, அதில் எந்த அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது பற்றியும், இரண்டு அணிகளும் ஏன் பரம எதிரிகள் என சொல்லப்படுகின்றன என்பதை விவரிக்கும் ஒரு புள்ளி விவரம் பற்றியும் இங்கே காணலாம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 37 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 வெற்றிகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வெற்றிகளையும் பெற்று இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நான்கு இறுதிப் போட்டிகளில் சந்தித்துள்ளன.

அந்த நான்கில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2010, 2013, 2015 மற்றும் 2019 ஆகிய நான்கு ஐபிஎல் தொடர்களிலும் இந்த அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அதில் 2010 ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது, மற்ற மூன்று இறுதிப் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றது.
இதில் மற்றொரு ஆச்சரியமும் உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா நான்கு முறை மோதின. அதாவது லீக் சுற்றில் இரண்டு முறையும், பிளே ஆப் சுற்றில் ஒரு முறையும், இறுதிப் போட்டியில் ஒரு முறையும் மோதின.
பிளே ஆப் சுற்றிலும், இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் மோதுவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். ஆனால் அதை மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்று முறை செய்துள்ளன. இதுவே இந்த இரண்டு அணிகளும் பரம எதிரிகள் என்பதை சுட்டிக் காட்டும் விஷயமாக உள்ளது.
IPL 2025: இதுவரை தோனி செய்த ஐபிஎல் சாதனைகள்.. ரன்கள், விக்கெட் கீப்பிங் ரெக்கார்டு, கேப்டன்சி சாதனை
மேலும் இந்த இரண்டு அணிகளும் மொத்தம் ஆறு முறை பிளே ஆப் சுற்றில் விளையாடி உள்ளன. அந்த ஐந்து பிளே ஆப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.