விண்வெளியானது, கணிக்க முடியாததாகவும், பல விசித்திரங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்நிலையில் இன்று மார்ச் 6 ஆம் தேதி, மூன்று சிறுகோள்கள் பூமியைக் கடந்து செல்லும் தகவல் வெளியாகியுள்ளது, இதில் இரண்டு விமானத்தின் அளவு என்றும் , ஒன்று பேருந்தின் அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

3 சிறு கோள்கள்

சுமார் 150 அடி அகலமுள்ள 2025 DU2 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள், சந்திரனுக்கு சற்று அப்பால் 337,000 மைல்கள் கடந்து செல்லும் என்பதை நாசாவின் தரவு உறுதிப்படுத்துகிறது.
சிறுகோள் 2025 DS3 என்ற பெயரிட்டப்பட்ட மற்றொரு சிறுகோள், சுமார் 100 அடி அகலம், 4,070,000 மைல்கள் தொலைவில் செல்லும் என்றும் மற்றொரு சிறுகோளான, 2025 EW1, 509,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என்று தகவல் தெரிவிக்கின்றன.

நாசா தகவல்

இந்த சிறுகோள்கள் எதுவும் உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது என்று நாசா உறுதியளிக்கிறது. இந்த, 3 சிறுகோள்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும், அதன் பாதையை நாசா கண்காணித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதே அளவிலான சிறுகோள்கள், இதற்கு முன்பு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகையால், இத்தகைய விண்வெளி பாறைகளால் எதிர்கால அச்சுறுத்தல்களை கணிக்க மற்றும் சாத்தியமான அபாயங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் பூமியில் இருந்து 4.6 மில்லியன் மைல்களுக்குள் உள்ள சிறுகோள்களை கண்காணிக்கிறது. NEOWISE மற்றும் Pan-STARRS போன்ற தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் அவற்றின் பாதைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், பூமியின் மீது மோத வரும் சிறுகோள்களை முன்கூட்டியே கண்டறிந்து, அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாசா விஞ்ஞான்கள் எடுத்து வருகின்றன.