ARTICLE AD BOX
மும்பை: பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. மிகவும் குறைவான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கிளாமர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார். இவர் அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடையடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். இந்த நிலையில், தற்போது பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ ஒன்று படுவைரலாகி வருகிறது.
இதில் நடிகை பூனம் பாண்டேவிடம் செல்பி எடுக்க வந்த அந்த ரசிகர் அத்துமீறி இருக்கிறார். பூனம் பாண்டே அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிலையில், அந்த நபர், பூனமுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். உடனே பூனமின் உதவியாளர் அவரை தடுக்க, பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என பூனமின் மேனேஜர் கூறியுள்ளார்.