ARTICLE AD BOX
சென்னை புழல் மத்திய சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், என்.செந்தில்குமார் திடீர் சோதனை செய்தனர். சிறை ஆய்வுக்குப் பின் பேட்டியளித்த நீதிபதிகள்; சிறை வளாகம், கழிப்பறைகள் சுத்தமாக உள்ளன. 2 வாரத்திற்கு 2 முறை, சிக்கன், முட்டையுடன் சுகாதாரமான உணவு விநியோகிக்கப்படுகிறது. வாரத்தில் 3 முறை வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதி அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதிகள் மாதம் ரூ.7,500 சம்பளத்துக்கு பெட்ரோல் பங்கில் பணி புரிகின்றனர். இலவச சட்ட ஆலோசனை, வெளிநாட்டு கைதிகளுக்கு தொலைப்பேசி வசதி தேவை. சிறை மருத்துவமனைக்கு சிறந்த உள்கட்டமைப்பு தேவை என்று கூறினர்.
The post புழல் சிறைக்கு சடன் விசிட் கொடுத்த நீதிபதிகள்! appeared first on Dinakaran.