ARTICLE AD BOX
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவை வெளியிட்டது.
அதில், ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து ஜெயிலர் - 2 எப்போது துவங்கும் எனத் தெரியாமல் இருந்தது.
இதையும் படிக்க: இலங்கை செல்லும் பராசக்தி படக்குழு!
தற்போது, புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் - 2 படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளதாம். இதற்கான செட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.