ARTICLE AD BOX

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக நிதீஷ் குமார் இருக்கிறார். இதில் நிதிஷ்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் பாஜக கூட்டணியில் இணைந்தார். அதற்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தார். இந்த கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முடிவடைந்த நிலையில் அதிலிருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதீஷ்குமார் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதில் தேஜஸ்வி யாதவ் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் விடயை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடந்த 2005-ம் ஆண்டு வரை இருந்த லாலு பிரசாத் ஆட்சியை நிதீஷ் குமார் ஆசியுடன் ஒப்பிட்டு இந்த அரசாங்கம் என்னும் 40 வருடங்கள் ஆட்சியில் இருந்தாலும் கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள காலகட்டத்தை குறை கூறிக் கொண்டே இருக்கும் என்றார். அப்போது பேசிய நிதிஷ்குமார் உன் தந்தையை வளர்த்து விட்டதே நான் தான். உங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் கூட என்னிடம் ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேட்டனர். இருப்பினும் அவரை நான் ஆதரித்தேன். மேலும் பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிப்பதற்கு லாலு எதிர்ப்பு தெரிவித்த போது தான் அதனை நான் தவறு என்று கூறினேன் என்றார்.