ARTICLE AD BOX
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திமுக அரசு அலட்சியமாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்குகூட பாலியல் தொல்லை, பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை, பரமக்குடியில் பட்டப்பகலில் நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்:
-செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை
-பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை
-பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர்…
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி, திமுக ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் முதல்வர் கவனம் செலுத்தாமல், அலட்சியமாக உள்ளார். சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் எக்ஸ் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: கை ரிக்ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்