ARTICLE AD BOX
புவனேஸ்வர்,
6-வது புரோ ஆக்கி லீக் தொடரில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி முந்தைய நாள் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் குர்ஜத் சிங் கோல் அடித்தார்.
நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை சந்திக்கிறது.
புரோ ஆக்கி லீக் தொடரில் பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.
Related Tags :