புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ள 8 வெஜிடேரியன் உணவுகள் :

3 hours ago
ARTICLE AD BOX

புரதம் (Protein) என்பது நமது உடலின் அடிப்படை கட்டமைப்பு கூறாகும். நமது தசைகள் , எலும்புகள் , தோல், மற்றும் உயிரணுக்கள் (Cells) அனைத்தும் புரதத்தால் உருவாகின்றன. எனவே, தினசரி உணவில் போதுமான அளவு புரதம் சேர்த்துக் கொள்ளுவது மிகவும் அவசியம். பலரும் "சைவ உணவில் போதுமான புரதம் கிடைக்காது" என நினைத்து, சிக்கன், முட்டை என அசைவ உணவுகளை விருப்பமே இல்லை என்றாலும், அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையில் சைவ உணவிலும் நம்முடைய தேவைக்கு ஏற்ற அளவு புரதம் கிடைக்கும். நான்வெஜை விட புரோட்டீன் அதிகமாக இருக்கும் 8 முக்கியமான உணவுகள் இதோ...

புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ள 8 வெஜிடேரியன் உணவுகள் :

1. பருப்பு வகைகள் :

100 கிராம் பருப்பில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது.

ஏன் முக்கியம்?

* பருப்பு சிறந்த நியூட்ரியன்ட் பிளேண்ட் புரதமாகும்.
* உடலுக்கு தேவையான நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.
* இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
* பருப்புகளை சாம்பார், ரசம், சுண்டல், கூட்டு மற்றும் பருப்பு அடை போன்ற உணவுகளில் சேர்க்கலாம்.

2. கொண்டைக்கடலை :

100 கிராம் கொண்டைக்கடலையில் சுமார் 19 கிராம் புரதம் உள்ளது

ஏன் முக்கியம்?

* இது நீண்ட நேரம் உண்ண உணர்வை தரும் , எடை குறைக்கும்.
* இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது.
* தசைகள் கட்டமைப்புக்கு சிறந்தது.
* சுண்டல், சிக்கி, கறி, ஹம்மஸ் என பல வகைகளிலும் சாப்பிடலாம்.

3. நிலக்கடலை :

100 கிராம் நிலக்கடலையில் 25-30 கிராம் புரதம் உள்ளது.

ஏன் முக்கியம்?
* புரதத்தோடு சேர்ந்து, ஆரோக்கியமான கொழுப்பு அதிகம்.
* இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
* உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
*வெறும்பருப்பு, கடலை முறுக்கு, கிராஸ்டட் பீனட் பட்டர் ஆகியவற்றாக செய்து சாப்பிடலாம்.

4. பால் மற்றும் பால் பொருட்கள் : 

1 கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது.

ஏன் முக்கியம்?
* பாலில் உள்ள கேசின் (Casein) மற்றும் வெய் (Whey) புரதங்கள் உடலுக்கு அவசியமானவை.
* எலும்புகளுக்கு காசி்யம் வழங்கும்.
* உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* பால், தயிர், பன்னீர் மற்றும் தயிர் கூட்டு.

5. சோயா - தொஃபு (Soybeans & Tofu):
100 கிராம் சோயாவில் 36 கிராம் புரதம் உள்ளது

ஏன் முக்கியம்?

* அனைத்து நிறைவான அமினோ அமிலங்களும் கொண்ட ஒரே சைவ உணவு.
* தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
* பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது.
* தொஃபு கிரேவி, சோயா பருப்பு, சோயா கறி, சோயா லட்டு ஆகிய வடிவில் சாப்பிடலாம்.

6. கீரை வகைகள் :

100 கிராம் கீரையில் 3-4 கிராம் புரதம் உள்ளது.

ஏன் முக்கியம்?

* இது மிகுந்த இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வழங்கும்.
* ரத்த சோகையை போக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
* செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
* கீரை சாதம், கீரை குழம்பு, பொரியல், கூட்டு , சூப் செய்து சாப்பிடலாம்

7. சாமை, கேழ்வரகு, தினை :
100 கிராம் கேழ்வரகில் 7-9 கிராம் புரதம் உள்ளது.

ஏன் முக்கியம்?

 * இது நார்ச்சத்து கொண்டது.
* சர்க்கரை மட்டத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
* எடையை கட்டுப்படுத்தும்.

கேழ்வரகு கூழ், தினை உப்புமா, சாமை சாதம்.

8. முட்டைக்கோஸ்  மற்றும் ப்ரோக்கோலி
100 கிராம் ப்ரோக்கோலியில் 4-5 கிராம் புரதம் உள்ளது.

ஏன் முக்கியம்?
* உடல் டெடாக்ஸாக செயல்படுகிறது.
* புற்றுநோயை தடுக்கும்.
* வயிற்று பொருள்களைச் சரிசெய்ய உதவும்.
* பொரியல், சூப், சாதம் செய்து சாப்பிலாம்.

Read Entire Article