புதுச்சேரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: புதிய விசாரணை அதிகாரிகள் நியமனம்

2 hours ago
ARTICLE AD BOX

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ள தவளக்குப்பம் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் இருந்து அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில், 1 வகுப்பு படித்த 6 வயது சிறுமிக்கு, அங்கு பணிபுரிந்த ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர்.இது தொடர்பாக, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை, 25, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமி பாலியல் வழக்கை, அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கில் இருந்து அவர்கள் மாற்றப்பட்டு, முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் சத்யா ஆகியோர் புதிய விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதற்கான உத்தரவை டி.ஜி.பி., ஷாலினி சிங், பிறப்பித்துள்ளார். 

Read Entire Article