புதுச்சேரி: குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் சங்கம் போராட்டம்

3 hours ago
ARTICLE AD BOX

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

Advertisment

புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் பழனிநாதன் தலைமையில், குடிசை மாற்றுவாரிய அலுவலக வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், நிரந்தர ஊழியர்களுக்கு தகுதி அடிப்படையிலும், சினியாரிட்டி அடிப்படையிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் 10 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமின்றி ஏ.சி.பி மற்றும் எம்.ஏ.சி.பி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  

10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்ற சி.எல்.ஆர்-ம் ஊழியர்களை பணி நிரந்தரமும், என்.எம்.ஆர் ஊழியர்களுக்கு சி.எல்.ஆர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தக்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமதான், இரவிச்சந்திரன், இராதாகிருஷ்ணன், கோவிந்தராசு, ஆனந்தன், வெங்கடேன் அரசு ஊழியர் சம்மேளன நிரந்தர செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நமச்சிவாயம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article