பா.ஜ.க பிரமுகர் என கூறி பணமோசடி: புதுச்சேரியில் வாலிபர் கைது!

7 hours ago
ARTICLE AD BOX

புதுச்சேரி மணவெளி தொகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற ராஜகணபதி. இவர் பாஜக பிரமுகர் எனக் கூறிக்கொண்டு பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த பாலு என்பவரிடம் ரூபாய் 8 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு அதனை தராமல் அலைக்கழித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக பாலு அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலை மேலான போலீசார் வழக்கு பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். மேலும் இவர் மீது பல்வேறு மோசடிப் புகார்கள் வர வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே இவருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் கட்சியில் உறுப்பினர் கூட இல்லை என பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Read Entire Article