புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்! உச்சநீதிமன்ற வழக்கு என்னாகும்?

1 week ago
ARTICLE AD BOX

தேர்தல் ஆணையர் நியமனத்திற்கான விதிகளை ஒன்றிய அரசு மாற்றிய பிறகு பிரதமரும் ஒன்றிய அமைச்சருமே தேர்தல் ஆணையரை முடிவு செய்யும் நிலை ஏறபட்டுள்ளது இதனை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்றை பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் 18ம் தேதி தலமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவடைவதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஆனால் வழக்கை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம், 18ம் தேதி ஏதாவது மாற்றம் நடந்தால் அதன் விளைவுகளையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அடங்கிய குழு தேர்தல் ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக நியமன்ம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 2029ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை ஆகும். 

மேலும், ஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக உள்ள விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read Entire Article