ARTICLE AD BOX
சீரியல் நடிகை அபிநவ்யா தீபக் புதிதாக கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் அபிநவ்யா தீபக். தனது திறமையின் மூலமாக சீரியலில் கால் பதித்தார். அப்படி அவர் நடித்த சீரியல்களில் சித்திரம் பேசுதடி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் தீவிர ரசிகையான அபிநவ்யா, சினிமாவில் அவருக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதை தனது ஆசையாக கொண்டுள்ளார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் நடித்து வருகிறார் அபிநவ்யா. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சி டெலிகாஸ்ட் ஆகி வருகிறது . தற்போது வரையில் கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சீரியலில், சைத்ரா ரெட்டி கயல் என்கிற லீடூ ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்துள்ளார்.
God of Love புதிய போஸ்டருடன் வெளியான சிம்புவின் 51-ஆவது பட அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?
இவர்களுடன் இணைந்து மீனாகுமாரி, வழக்கு எண் முத்துராமன், உமா ரியாஷ் கான், அபிநவ்யா தீபக், பாலா சிங் ஆகியோர் உள்பட ஏராளமானோர் துணை நடிகர், நடிகைகளாக நடித்து வருகின்றனர். சிறப்பு தோற்றத்தில் விஜய் விஷ்வா, ராகுல் ரவி, வடிவுக்கரசி, பாலதித்யா, சந்திரா லக்ஷ்மண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
அபிநவ்யா சீரியல் நடிகரான தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். இந்த நிலையில் தான் சீரியல் பிரபலங்கள் கார், வீடு வாங்கி வரும் நிலையில் அபிநவ்யாவும் புதிதாக ஆடம்பர சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிநவ்யா, தான் கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கார் வாங்கிய அபிநவ்யாவிற்கு ரசிகர்கள் பலரும் ஹார்ட்டின் பதிவிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.